செட்ரூவிக் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

கனடாவின் செட்ரூவிக் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
டிரக் வண்டி ஒன்றும் கார் ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே நேற்று(திங்கட்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது காரில் பயணித்த 72 வயதான வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பனிபொழிவினால் வீதி வழுவழுப்பாக காணப்பட்டதாகவும், இதன்காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.