செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கண்ணாடிப் பாலம் திறந்து வைப்பு!
சீனாவில் செயற்கை நீர் வீழ்ச்சியுடன் புதிய கண்ணாடிப் பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலுள்ள கிங்யுவான் நகரில் 368 மீட்டர் நீளத்தில் குறித்த பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தரையில் இருந்து 1,640 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மீது நடந்துசென்று ஆழமான பள்ளத்தாக்குகளையும், இயற்கையாக சூழ்ந்துள்ள மலைகளையும் ரசிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த கண்ணாடி பாலத்திற்கு அடியில் செயற்கை நீர் வீழ்ச்சியும் அமைக்கப்பட்டுள்ளது.
சீன மொழியில் ‘சொர்க்கத்தின் கதவுகள்’ என வர்ணிக்கப்படும் இந்த பாலத்தில், சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் நடந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.