செவ்வாய்க்கு விண்கலம் அனுப்ப திட்டமிட்டுள்ள சீனா!

நிலவில் ஆய்வு நிலையம் ஒன்றினை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் சீனா Chang’e-4 விண்கலத்தை நிலவின் விளிம்பில் வெற்றிகரமாகத் தரையிறக்கியது.
விண்வெளி வல்லரசு என்ற நிலையை எட்ட முயலும் சீனாவின் இலக்கில், இது முதல் படியாகக் கருதப்படுகிறது.
இதேவேளை, 2020ஆம் ஆண்டுக்குள் செவ்வாய்க்கும் விண்கலம் ஒன்றினை அனுப்புவதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.