ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணியின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள்

லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு இருபது தொடரில் ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணி வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியதை அடுத்து யாழில் இளைஞர்கள் சிலர் கேக் வெட்டி தமது மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.
லங்கா பிரீமியர் லீக் தொடர் கடந்த நவம்பர் 26ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை இறுதிப் போட்டி நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் காலி கிளாடியேற்றர்ஸ் மற்றும் ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணிகள் மோதியிருந்தன.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், பதிலுக்கு 189 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய காலி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில் 53 ஓட்டங்களால் காலி அணி தோல்வியடைந்தது.
ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணி வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியதை அடுத்து யாழ்ப்பாண இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து நேற்றிரவு கேக் வெட்டி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.