ஸ்ரீவிஜயா விமானம் எஸ்.ஜே.182 கடலில் மூழ்கியதாக தகவல்? (2ஆம் இணைப்பு)

ஸ்ரீவிஜயா விமானம் எஸ்.ஜே.182, ஒரு நிமிடத்திற்குள் 10,000 அடியிலிருந்து விழுந்து ஜாவா கடலில் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘இந்தோனேசியாவில் போயிங் 737-500 காணாமல் போனதை அறிந்தோம். நாங்கள் இதுதொடர்பான தகவல்களை தொடர்ந்து திரட்டி வருகிறோம். விரைவில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம்’ என கூறினார்.
ஜகார்த்தாவின் வடக்கே கடலில் மிதக்கும் குப்பைகள் என்ன என்பதைக் காட்டும் படம் வெளிவந்துள்ளது. இது விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இந்தோனேசியாவின் பொண்டியானாக் செல்லும் வழியில் இருந்த விமானத்தில் இருந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
விமானியுடன் தொடர்பு இழந்த பின்னர் தேடல் மற்றும் மீட்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எயார்நவ் ராடார்பாக்ஸ் தரவுகளின்படி, கடைசி தொடர்பு இன்று காலை 07:40 மணிக்கு 10,900 அடியிலிருந்து 7,650 அடியாக குறைந்தது.
இந்த விமானம் 2012இல் ஸ்ரீவிஜயா எயார் விமான நிறுவனத்தில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட போயிங் 737 பயணிகள் விமானம் மாயம்: 50பேரின் நிலை என்ன?
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே போயிங் 737 என்ற பயணிகள் விமானம் மாயமாகியுள்ளது.
இந்த விமானம் இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சோகர்னோ-ஹட்டா விமான நிலையத்திலிருந்து தென்கிழக்கு ஆசிய நாட்டின் மற்றொரு நகரமான பொண்டியானாக் வரை சென்று கொண்டிருந்தது.
ஸ்ரீவிஜயா விமானம் எஸ்.ஜே.ஒய் 182 உடன் தொடர்பு இழந்த பின்னர் இந்தோனேசியாவின் போக்குவரத்து அமைச்சகம் ஒரு தேடல் மற்றும் மீட்பு விசாரணை நடந்து வருவதாக உறுதிப்படுத்தியது. இந்த விமானம் போயிங் பி 737-500 என நம்பப்படுகிறது
இதுகுறித்து இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அடிதா இராவதி கூறுகையில், ‘நாங்கள் தற்போது விசாரணையில் உள்ளோம். பசர்னாஸ் மற்றும் தேசிய போக்குவரத்து விபத்து குழு (கே.என்.கே.டி) உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளோம்’ என கூறினார்.
விமானம் புறப்பட்ட நான்கு நிமிடங்களில், 60 வினாடிகளுக்குள் 10,000 அடி (3,000 மீ) உயரத்தில் ராடாரில் இருந்து மறைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானம் சுமார் 50 பேரை ஏற்றிச் சென்றதுடன், அது காணாமல் போன இடத்திற்கு அருகே கடலில் இருந்து விமான குப்பைகள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.