ஜனநாயகத்தை பாதுகாக்கும் தேர்தல் – கனிமொழி
In இந்தியா April 18, 2019 8:32 am GMT 0 Comments 2461 by : Krushnamoorthy Dushanthini

தற்போதைய மக்களவை தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற தேர்தலாக அமைய வேண்டும் என தி.மு.க வேட்பாளர் கனிமொழி தெரிவித்தார்.
தமிழகத்தில் மக்களவை தொகுதிக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்ற நிலையில் முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட திரைத்துறை பிரபலங்கள் பொதுமக்கள் என பலர் வாக்களித்து வருகின்றனர்.
அந்தவகையில் தி.மு.க வேட்பாளர் கனிமொழி சென்னையில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் சிறப்பாக வெற்றிபெறுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.
இந்த தேர்தல் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும், மதசார்பற்ற தன்மையையும் பாதுகாக்கின்ற தேர்தலாக அமைய வேண்டும் என தெரிவித்தார்.
இதேவேளை இந்திய ஜனநாய கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவும், கோவையில் அமைச்சர் எஸ்.பி. ரவி பச்சமுத்துவும், குள்ளம்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் என பல அரசியல் தலைவர்கள் வாக்களித்துள்ளனர்.
வாக்களிக்கும் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். உண்மையில் அது இயந்திர கோளாறா அல்லது வேறு எதுவும் பிரச்சினையா என பின்னர் தெரியும்” என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.