ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு
In ஆசிரியர் தெரிவு October 23, 2018 2:10 am GMT 0 Comments 1525 by : Yuganthini

இந்திய விஜயத்தை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கு விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்துள்ளது.
இதன்போது இந்திய விஜயம் குறித்து ஜனாதிபதிக்கு பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வியாழக்கிழமை இந்தியாவுக்கு மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.