ஜனாதிபதியின் கீழ் பாதுகாப்பு மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கள்!

பாதுகாப்பு மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (வியாழக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பொதுப் பாதுகாப்பு அமைச்சரவை அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
அத்துடன், அமைச்சர் சமல் ராஜபக்ச உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.