ஜனாதிபதியின் பணிப்பு: சடுதியாகக் குறைவடையவுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை!
In ஆசிரியர் தெரிவு December 20, 2019 12:07 pm GMT 0 Comments 4783 by : Litharsan

ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைவடையுமென அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன்வசதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் பொது பொருளாதார காரணிகளினால் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், விலைகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், மக்களின் வாழ்க்கைச் செலவுகள் குறைக்கப்பட்டு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை முழுமையாக செயற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களுக்கு நிதி வழங்கப்படும் என்பதோடு, வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து அமைச்சு மற்றும் அரச நிறுவனங்களில் பிரத்தியேகமான செயற்திட்டங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய முன்னெடுக்கப்படுவதாக செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.