ஜனாதிபதி செயலகத்தில் பெருகியுள்ள பூனைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு!
In இலங்கை October 20, 2018 9:16 am GMT 0 Comments 1406 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

ஜனாதிபதி செயலகத்தில் பெருகியுள்ள பூனைகளை அங்கிருந்து அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மாநகர சபையிடம் (CMC) ஜனாதிபதி செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 3 வருடங்களாக ஜனாதிபதியின் செயலகத்தில் பூனைகள் வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறியே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த கொழும்பு மாநகர சபையின் தலைமை கால்நடை வைத்தியர் I.V.P. தர்மவர்த்தன, பூனைகளை அங்கிருந்து அகற்றுவது சாத்தியமில்லை என கூறியுள்ளார்.
அத்துடன் குறித்த பூனைகளை கொண்டு சென்று விடுவதற்கான நிலையங்கள் இல்லை என சுட்டிக்காட்டிய அவர், அடுத்த வாரமளவில் அந்த பூனைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.