ஜனாதிபதி ட்ரம்பின் பிரித்தானிய விஜயம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சனம்
In இங்கிலாந்து April 24, 2019 7:53 am GMT 0 Comments 2494 by : Risha
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரித்தானிய விஜயத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உரிமை ஆர்வலர்கள் இவ்வாறு விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்ற நிலையில், அவரை பிரித்தானியாவிற்குள் அனுமதிப்பது தகுந்ததற்றது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்வரும் ஜுன் மாதம் 3ஆம் திகதி மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இத்தகவலை மகாராணியின் மாளிகையும், அரச அலுவலகமும் நேற்று உறுதிபடுத்தியது. இதனையடுத்து கடுமையான எதிர்ப்புகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.