ஜனாதிபதி தேர்தல் – கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து சிவமோகன் கருத்து
In இலங்கை August 7, 2019 6:21 am GMT 0 Comments 1301 by : Dhackshala
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிக்க போகின்றது என்பது தொடர்பாக இன்னும் தீர்மானிக்கவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பாக கூட்டமைப்பு இதுவரையில் எந்த தீர்மானத்தையும் எட்டவில்லை.
வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னரே அந்த விடயம் தொடர்பாக தீர்மானிக்கவுள்ளோம். இதுவரையில் ஜனாதிபதி மைத்திரி உட்பட அனைவரும் தமிழர்களை ஏமாற்றியுள்ளனர்.
எதிர்வரும் தேர்தலில் தமிழர்களுக்கான ஒருவரை நிறுத்தி போட்டியிடாத வரையில், பேரினவாத கட்சியொன்றுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களாகவே இருப்போம். ஆனால் அதற்காக அந்த கட்சிக்கு பின்னால் சென்றவர்களாக கூற முடியாது” என மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.