ஜப்பானில் கொவிட்-19 அவசர நிலையை மீறிய துணைக் கல்வி அமைச்சர் உட்பட மூவர் பதவிநீக்கம்!

ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிரான அவசர நிலையை மீறி இரவு விடுதிக்குச் சென்ற துணைக் கல்வி அமைச்சர் டெய்டோ டானோஸே மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவசரநிலை அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த துணைக் கல்வி அமைச்சர் டெய்டோ டானோஸே, அவசர நிலையை மீறி இவர்கள் இரவு விடுதிக்குச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இதனை விசாரித்த பிரதமர் யோஷிஹிடே சுகா, அமைச்சரவையிலிருந்து டெய்டோ டானோஸே மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை பதவியிலிருந்து நீக்கினார்.
ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியைச் (எல்டிபி) சேர்ந்த டெய்டோ டானோஸே மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து கட்சியிலிருந்து விலகினர்.
லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் இளைய கூட்டணி பங்காளியான கோமிட்டோவின் முன்னாள் செயல் பொதுச் செயலாளர் கியோஹிகோ டோயாமா, ஜனவரி மாதம் 22ஆம் திகதி, டோக்கியோவின் கின்சா மாவட்டத்தில் இரவு விடுதிக்குச் சென்றதை ஒப்புக்கொண்டதையடுத்து அவரே முன்வந்து தனது பதவியை இராஜினாமா செய்தார்.
ஜப்பானில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு மக்கள் இரவில் தேவையின்றி வெளியில் நடமாடவும், விடுதிகள், மதுபான விடுதிகளுக்குச் செல்வதை தவிர்க்கவும், உணவகங்களை முன்கூட்டியே மூடவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.