ஜப்பானில் 200 ஆண்டுகளில் பதவி விலகும் முதலாவது பேரரசர்

ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி அவர் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) பதவி விலகுவார் என தெரிவிக்கப்படுகிறது.
85 வயதான பேரரசர் தனது வயது மற்றும் உடல்நலக் குறைவு என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தனது வயது மூப்பின் காரணமாக தினசரி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் உடல்நிலை நலிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானில் கடந்த இருநூறு ஆண்டுகளில் பதவி விலகும் முதலாவது பேரரசர் இவர் ஆவார்.
அதற்கமைய அவரது புல்வர் முடிக்குரிய இளவரசர் நறுஹிட்டோ அரியணையை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பானில் அரசருக்கு எந்த அரசியல் அதிகாரமும் இல்லை என்ற போதிலும், அவர் தேசத்தின் அடையாளமாக விளங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.