ஜமால் கஷோக்கி கொலை செய்யப்பட்டிருந்தால் சவுதி அதற்கான விளைவுகளை சந்திக்கும் – ட்ரம்ப்
துருக்கியில் வைத்து காணாமல் போன சவுதி அரேபிய ஊடகவியலாளர், கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவுகளை அந்த நாடு சந்திக்கும் என அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜமால் கசோக்கி என்ற ஊடகவியலாளர் கடந்த இரண்டாம் திகதி முதல் மாயமாகியுள்ள நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி, “ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி நடந்திருந்தால் அது மிகவும் துயரமானது. சவுதி அரேபியா அதற்கு ஈடாக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
சவுதி மன்னர் சல்மானின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வந்த அந்த நாட்டை சேர்ந்த ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி கடந்த இரண்டாம் திகதி மாயமானார்.
அவர், இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்ற போதே மாயமானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து அவர் தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய அதிகாரிகளால் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வரும் நிலையில், இது ஆதாரமற்றது எனவும் கூறி வருகின்றது. இந்த நிலையில் ஊடகவிளலாளர் ஜமால் கஷோக்கி காணாமல் போனமை தொடர்பாக சவுதி மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி பொலிஸார் இஸ்தான்புல் துணைத்தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜமால் கஷோக்கி என்ற ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது. அது தொடர்பான காணொளி ஒன்றையும் துருக்கி அரச ஊடகம் வெளியிட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையில் மாயமான ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவுகளை சவுதி அரேபியா சந்திக்கும் என அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.