ஜமால் கஷோக்கி மரணத்தின் மர்மம் தீரும் வரை சவுதிக்கு ஆயுதங்கள் விற்கப்படமாட்டாது – ஜேர்மனி
சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் முடியாட்சிக்கு எதிராக தீவிர விமர்சனங்களை வெளியிட்ட ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி துருக்கி சவுதி தூதரகத்தில் வைத்து சந்தேகத்திற்கிடமான வகையில் கொல்லப்பட்டார். இந்த தகவலை சவுதி அரசாங்கம் இறுதி கட்டத்தில் உறுதி செய்தது.
இதனை அடுத்து, சவுதிக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஜமால் கஷோக்கியின் மர்மமான மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது
இந்தநிலையில், ஜமால் கசோக்கியின் படுகொலை குறித்து முழுமையான விசாரணை நடத்தி, கொலையில் உள்ள மர்மங்கள் அவிழ்க்கப்படும் வரையில் சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யப்படமாட்டாது என்று ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்கல் தெரிவித்துள்ளார்.
செக் குடியரசின் பிரதமர் ஆண்ட்ரெஜ் பேபிஸ் உடன் பராகுவேயில் நேற்று (வௌ்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டா்ர.
480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான ஆயுதங்களை சவுதிக்கு ஏற்றுமதி செய்ய கடந்த மாதம் ஜெர்மனி இணக்கம் தெரிவித்திருந்தது.
அதேவேளை, ஐரோப்பா பிரெக்சிற் தொடர்பில் ஒரு முறையான தீர்வை விரும்புகிறது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதுபோன்று பிற விடயங்கள் தொடர்பில் விவாதிக்கவில்லை.
இதுதவிர, துருக்கியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜேர்மனிய பிரஜைகளின் விவகாரம் தொடர்பாக அந்த நாட்டு ஜனாதிபதி தையிப் எர்டோகனிடம் கலந்துரையாடியிருப்பதாக ஜேர்மன் அதிபர் இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.