ஜம்மு – காஷ்மீரில் வாக்களிப்போரின் வீதத்தில் வீழ்ச்சி!
In இந்தியா April 29, 2019 8:00 am GMT 0 Comments 2223 by : Krushnamoorthy Dushanthini

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது கட்ட வாக்கு பதிவு நடைபெற்றுவருகின்றது.
இந்த தொகுதியில் 3.45 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், முதல் இரண்டு மணிநேரங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்காளர்களே வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி காலை 9 மணி நிலைவரப்படி 0.91 வீத வாக்காளர்களே வாக்களித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை இந்த பகுதியில் இன்று மாலை நான்கு மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெறுவதுடன், குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.