ஜூன் 3 இல் டொனால்ட் ட்ரம்ப் இங்கிலாந்துக்கு வருகிறார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 3 முதல் 5 வரை மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமாக இங்கிலாந்துக்கு வருகை தருவார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா இருவரும் மகாராணியின் விருந்தினராக இங்கு இருப்பர் என்றும் டி-டே (D-Day ) எனப்படும் நேசநாடுகளின் படையணி நோர்மண்டியில் தரையிறங்கிய 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வு போர்ட்ஸ்மவுத் நகரில் நடைபெறவுள்ள நிலையில் அதிலும் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியப் பிரதமரை டவுனிங் ஸ்ட்ரீட் வாசஸ்தலத்தில் சந்திக்கவுள்ளார்.
கடந்த 2018 ஜூலையில் பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமாக வருகைதந்த டொனால்ட் ட்ரம்ப் வின்சர் மாளிகையில் மகாராணியைச் சந்தித்து உரையாடிருந்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.