ஜூலியன் அசாஞ்சை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது – பிரிட்டிஷ் நீதிமன்றம்
In இங்கிலாந்து January 4, 2021 11:16 am GMT 0 Comments 2081 by : Jeyachandran Vithushan

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது என லண்டனில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மன ஆரோக்கியம் குறித்த கோரிக்கைகளை பரிசீலித்த நீதிபதி குறித்த உத்தரவை இன்று (திங்கட்கிழமை) பிறப்பித்துள்ளார்.
49 வயதான ஜூலியன் அசாஞ்ச் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்த போர்கள் தொடர்பான இரகசிய அமெரிக்க இராணுவ ஆவணங்களை வெளியிட்டதாக உளவு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
இந்நிலையில் அமெரிக்க அரசியல் பழிவாங்கல் நோக்கத்திற்காக இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக தெரிவித்து ஒப்படைப்பு கோரிக்கையை எதிர்த்தும் போராடியிருந்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.