ஜெட் எயார்வெய்ஸ் விமானிகளுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வேலை வாய்ப்பளித்தது

கடன் சுமையால் முடங்கிப்போன ஜெட் ஏயார்வேய்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய 100 விமானிகள் உட்பட 500 பேருக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வேலைவாய்ப்பு அளித்துள்ளது.
இந்த அறிவிப்பை ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டார்.
கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையால் முற்றிலுமாக முடங்கிப்போன ஜெட் ஏயார்வேய்ஸ் விமான சேவை நிறுவனத்தை சேர்ந்த விமானிகள், பொறியாளர்கள், பணிப்பெண்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை இழந்ததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிப் போனது.
இந்நிலையில், ஜெட் ஏயார்வேய்ஸ் நிறுவனத்தின் சந்தையைப் பிடிக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி புதிய விமானங்களை வாங்கவும், வெளிநாடுகளில் இருந்து பல விமானங்களை வாடகைக்கு பெறவும் தீர்மானித்துள்ளது.
இந்த விமானங்களில் பணியாற்ற ஜெட் ஏயார்வேய்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்களுக்கு முன்னுரிமையளிக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விரும்பியது.
அதன் அடிப்படையில் ஜெட் ஏயார்வேய்ஸ் நிறுவனத்தில் முன்னர் பணியாற்றிய 100 விமானிகள் உட்பட 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.