ஜெட் விமான விபத்தில் ரோயல் விமானப் படையின் பொறியியலாளர் உயிரிழப்பு
In இங்கிலாந்து March 21, 2018 10:22 am GMT 0 Comments 1463 by : Elakkiya
வடக்கு வேல்ஸ் அங்லெசியில் (Anglesey) பகுதியில் அமைந்துள்ள ரோயல் விமானப் படை நிலையத்தில் இடம்பெற்ற ஜெட் விமான விபத்தில் Red Arrows Aerobatics அணியின் பொறியியலாளர் உயிரிழந்துள்ளதாக ரோயல் விமானப் படையினர் அறிவித்துள்ளனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட இந்த விபத்தில் விமானி காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸாரும் வல்லுநர்களும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.