ஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு
In இந்தியா April 25, 2019 2:36 pm GMT 0 Comments 2425 by : Krushnamoorthy Dushanthini
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் ஜுன் மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணை இன்று (வியாழக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது வருமான வரித்துறையினர் சார்பில் அறிக்கையொன்றும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் ஜெயலலிதா செல்வ வரியாக ரூ.10.12 கோடியும், வருமான வரியாக ரூ.6.62 கோடியும் செலுத்தவேண்டியுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணையை எதிர்வரும் ஜுன் மாதம் 6ஆம் திகதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க கோரியும் தீபக், ஜெ.தீபாவிற்கு உரிமை கிடையாது எனக்கோரியும் அ.தி.மு.க. உறுப்பினர்களான புகழேந்தி மற்றும் ஜானகி ராமன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.