ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு
In இந்தியா January 12, 2021 10:10 am GMT 0 Comments 1458 by : Yuganthini

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் விஜயம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு நடைபெறும் நினைவிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன்போது அதிகாரிகள், அங்கு நடைபெறும் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெளிவுப்படுத்தினர்.
இதேவேளை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி வணங்கினார்.
குறித்த விஜயத்தின்போது அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட கழக செயலாளர்கள் சத்யா, பாலகங்கா, விருகை ரவி, வெங்கடேஷ்பாபு, ஆதிராஜாராம், வேளச்சேரி அசோக், ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர்.நினைவிட வளாகத்தில் எழில்மிகு தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 50.80 கோடி ரூபாய் செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் இத்தாலி மார்பிள், பளிங்கு கற்கள் ஆகியவை பதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நினைவிடம் விரைவில் அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.