ஜேர்மனியின் வலதுசாரி தீவிரவாதிகளில் பெரும்பாலானோர் வன்முறையில் ஈடுபாடு

ஜேர்மனியில் உள்ள இருபத்து நான்காயிரம் தீவிர வலதுசாரி தீவிரவாதிகளில் சுமார் 12 ஆயிரத்து 700 பேர் வன்முறையில் ஈடுபாடு காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
உட்துறை அமைச்சின் தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
தீவிர வலதுசாரிகளிடமிருந்து வன்முறை அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் ஏற்கனவே அச்சுறுத்தல் விடுத்திருந்ததாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாரம் இடம்பெற்றிருந்த நாஸி போராளிகளின் அணிவகுப்பு பேரணி பிரதான அரசியல்வாதிகள் மற்றும் யூத குழுக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தீவிர வலதுசாரி தீவிரவாதிகளுக்கு எதிராக செயற்படுமாறு ஜேர்மனியின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.