ஜேர்மனியிலும் கண்டுப்பிடிக்கப்பட்டது புதிய வகை கொரோனா வைரஸ்!

ஜேர்மனியிலும் ஒரு புதுவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் அண்மையில் புதுவகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது ஜேர்மனியிலும் ஒரு புதுவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஜேர்மனியிலுள்ள Garmisch – Partenkirchen என்ற பவேரிய நகரமொன்றில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில், 73 நோயாளிகளுக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
அவர்களில் 35 பேருக்கு தொற்றியுள்ளது ஒரு புதுவகை கொரோனா வைரஸ் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ்களைப் போன்று இது எளிதில் பரவக்கூடியதா அல்லது பயங்கரமாக கொல்லக்கூடியதா என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அதைக் கண்டு பிடிப்பதற்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.