ஜேர்மனியில் புதிய வெளிவிவகார அமைச்சர் நியமனம்
In ஐரோப்பா March 9, 2018 9:32 am GMT 0 Comments 1573 by : Suganthini

சமூக ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் நீதியமைச்சருமான ஹைக்கோ மாஸ் (Heiko Maas), ஜேர்மனின் புதிய கூட்டணி அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.
இந்நிலையில், ஜேர்மனியில் இதுவரைகாலமும் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்துவந்த சிக்மர் கப்ரியல், அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜேர்மனியில் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டெம்பரில் நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில், எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளாததால், அந்நாட்டில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் குழப்பம் காணப்பட்டதுடன், அரசியல் முட்டுக்கட்டைக்கும் வழிவகுத்தது.
இந்நிலையில், அதிபர் அங்கேலா மெர்கல் தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்க சோசலிஸ ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் கடந்தவாரம் வாக்களித்ததைத் தொடர்ந்து, அதிபர் அங்கேலா மெர்கல் தலைமையில் கூட்டணி அரசாங்கம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.