ஜோர்தானில் பெரு வெள்ளம் : ஏழு பேர் உயிரிழப்பு – சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!
ஜோர்தானின் புராதன நகரான பெட்ராவில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை குறைந்தது 7 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 4 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.
தலைநகர் அம்மானுக்கு தென்மேற்காகவுள்ள மடபா பகுதியில் வாகனமொன்றில் பயணித்த ஐந்து பேர் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களை மீட்பதற்காக மீட்புப் படையினரும் உலங்கு வானூர்திகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, நாட்டில் நிலவும் அடை மழையை அடுத்து துறைமுக நகரான அகபாவிலும் அவசர காலநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சாக்கடல் பகுதியில் ஏற்பட்ட கடும் வௌ்ளம் காரணமாக பெரும்பாலும் சிறார்கள் உட்பட 21 பேர் நீரில் மூழ்கியதை அடுத்து இ இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்கள் பலர் அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர். இதுதவிர, தலைநகருக்கு வரும் பல பிரதான வீதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.