ஜோர்தான் சர்வதேச மரதன் போட்டியில் அகதிகளுக்கு வாய்ப்பு!
In பிரதான செய்திகள் March 31, 2018 7:54 am GMT 0 Comments 1820 by : Risha
ஜோர்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘டெட் டு ரெட்’ (Dead2Red) எனும் சர்வதேச தொடர் ஓட்ட மரதன் போட்டியில் இம்முறை முதன்முறையாக அகதிகளை கொண்ட அணி பங்குபற்றியுள்ளது.
பத்து போட்டியாளர்களை கொண்ட அகதிகள் அணியில் சிரியா, ஈராக் மற்றும் சூடான் நாடுகளை சேர்ந்த ஆறு பெண்களும், நான்கு ஆண்களும் இடம்பெற்றிருந்தனர்.
24 மணிநேரத்திற்குள் 242 கிலோமீற்றர் தூரத்தை ஓடி நிறைவு செய்யும் இந்த தொடர் ஓட்டப் போட்டியில், உலகளாவிய ரீதியில் 427 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.
ஜோர்தானின் எல்லை பகுதியான டெட் ஸீ பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட தொடர் ஓட்டப் போட்டியானது, ஆபிரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் இடைப்பட்ட செங்கடல் பகுதியில் நிறைவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டி குறித்து அதில் பங்குபற்றிய ஈராக் அகதியொருவர் கூறுகையில், ”எனக்கு இந்த போட்டி மிகவும் பிடித்திருந்தது. எனவே மகிழ்ச்சியுடன் இந்த போட்டியில் பங்குபற்றினேன். மரதன் போட்டியொன்றில் பங்குபற்ற வாய்ப்பு கிடைத்தமை இதுவே முதல் முறையாகும். பல்வேறு நாட்டவர்களை கொண்டவர்களான எமது அணி விளங்கிய போதும் நாம் ஒரு குடும்பமாக இதில் பங்குபற்றியிருந்தோம்” என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.