ஜோ பைடனை விரைவில் சந்திக்க ஜப்பானிய பிரதமர் விருப்பம்!

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனை, விரைவில் சந்திக்க ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா விருப்பம் தெரிவித்துள்ளார்.
சிம்போசியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்க-ஜப்பானின் பாதுகாப்பு கூட்டணி, கொரோனா வைரஸ் தொற்று மற்றும் புவி வெப்பமடைதல் குறித்து விவாதிக்க அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனை விரைவில் சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார்.
அத்துடன், அடுத்த ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கிற்கான முழுமையான கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை செயற்படுத்த ஜப்பான் தயாராகி வருவதாகவும் கூறினார்.
நடப்பு ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வரை, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்தது.
ஆனால், கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக, பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, அடுத்த வருடம் ஜூலை 23ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 8ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு, சுமார் 800 மில்லியன் டொலர்கள் செலவாகும் என சர்வதேச ஒலிம்பிக் குழு மதிப்பிட்டுள்ளது.
பொதுவாக போட்டிக்கான செலவை போட்டியை நடத்தும் நாடு, அந்த நகர நிர்வாகம் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் குழு ஏற்றுக்கொள்ளும். ஜப்பான் இந்த ஒலிம்பிக் போட்டிக்காக சுமார் 12.6 பில்லியன் டொலர் செலவழித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.