ஜோ பைடன் நிர்வாகம் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் சுலபமானதாக இருக்காது – கமலா ஹாரிஸ்!

ஜோ பைடன் நிர்வாகம் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் சுலபமானதாக இருக்காது என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின், 46ஆவது ஜனாதிபதியாக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் இன்று(புதன்கிழமை) பதவியேற்கவுள்ளார். அவருடன், துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளார்.
இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ”ஜோ பைடன் நிர்வாகம் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் சுலபமானதாக இருக்காது. இருப்பினும் மக்களின் ஒத்துழைப்பு, ஆதரவுடன், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
நாட்டின் ஜனாதிபதியாக பைடன், பதவியேற்கவுள்ளார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது, தடுப்பூசி வழங்குவது, பொருளாதாரத்தை மீட்பது என, மிக பெரும் சவால்கள் எங்கள் முன் உள்ளன. அவற்றை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
எங்கள் இலக்குகள், கடும் சவாலானது என்றாலும், மக்களின் ஒத்துழைப்பு, ஆதரவோடு, அவற்றை எதிர்கொள்வோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது. அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் வன்முறை நடந்துள்ளது.
எங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மிகுந்த தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும், பதவியேற்க தயாராகவுள்ளோம்.
மக்களின் ஆதரவோடு, அனைத்து பிரச்னைகளையும், சவால்களையும் முறியடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.“ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.