டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன் விதிமுறையில் திருத்தம் – ICC அறிவிப்பு!
In கிாிக்கட் September 30, 2018 3:41 am GMT 0 Comments 1893 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

மேம்படுத்தப்பட்ட டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன் விதிமுறை (DLS) இன்று முதல் அமலுக்கு வருவதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) மேற்கொண்டிருக்கும் இந்த திருத்தம் இன்று நடைபெறும் (ஞாயிற்றுக்கிழமை) தென் ஆப்பிரிக்கா மற்றும் சிம்பாவே அணிகள் இடையே கிம்பரலேயில் நடக்கும் ஒருநாள் போட்டியிலிருந்து அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டக்வொர்த் லீவிஸ் முறையின் 3 ஆவது பதிப்பு கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இரண்டாவது முறையாக திருத்தம் செய்யப்படுகிறது.
தற்போதைய முறையில் கடந்த நான்கு ஆண்டுகளில் விளையாடப்பட்ட ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளில் ஒவ்வொரு பந்திலும் எடுக்கப்படும் ஓட்டங்கள் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதாவது 700 ஒருநாள் மற்றும் 428, T-20 போட்டிகள் இந்த எல்லைக்குள் வருகின்றன.
புதிய திருத்தத்தில் அணிகள் ஒருநாள் போட்டியின் கடைசி ஓவர்களில் வேகமாக ஓட்டங்களை குவிப்பதால் ஓட்ட சராசரி உயர்ந்துள்ளது எனக் குறிப்பிடுகிறது.
இதன் மூலம் ஒருநாள் மற்றும் T-20 ஆகிய இரண்டு விதமான போட்டிகளிலும் இறுதி ஓவர்களில் ஓட்டங்கள் குவிப்பு விகிதம் மாறுவது தெளிவாகத் தெரிகிறது.
இதனால் ஒருநாள் போட்டிகளில் கடைசி 20 ஓவர்கள் மற்றும் T-20 போட்டிகள் ஆகிய இரண்டுக்குமே பொருந்தும் வகையில் டக்வொர்த் லீவிஸ் முறை திருத்தப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் இரண்டுக்கும் இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
தரம் 3 விதிமீறிலுக்கு வழங்கப்படும் சஸ்பெண்ட் புள்ளிகள் 8 லிருந்து 12ஆக உயர்ந்தப்பட்டுள்ளது. (6 டெஸ்ட் போட்டிகள் அல்லது 12 ஒருநாள் போட்டிகளுக்கு இணையானது)
தரம் 1, 2 மற்றும் 3 விதிமீறல்களை போட்டி நடுவர் (Match referee) விசாரித்து நடவடிக்கை எடுப்பார். தரம் 4 விதிமீறல்கள் மட்டும் நீதித்துறை ஆணையர் ஒருவரால் விசாரிக்கப்படும்.
இந்த மாற்றங்கள் கடந்த ஜூலை 2ஆம் திகதி டப்ளின் நகரில் நடந்த ஆண்டுக் கூட்டத்திலேயே உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் ஓராண்டுக்குக் குறைவாகவே இருக்கும் நிலையில் ஆடுகளம் குறித்த விதிகளில் சிறிய மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது.
உட்பிரிவு 11.4, 11.7 மற்றும் 12.8 ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தங்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை குறிப்பிட்ட அவகாசத்திற்கு முன்பே முடித்துக்கொள்ள அனுமதி வழங்குகிறது.
ஆடுகளத்தில் எல்லை கொடுக்கல் பிட்ச் மையத்திலிருந்து அதிகபட்சம் 90 M வரையே இருக்கலாம் என்ற விதி உள்ளது. இதே போல ஆடுகளத்தின் எல்லையிலிருந்து 10 கெஜம் இடைவெளியைத் தாண்டி எல்லை கூடுகள் இருக்கக் கூடாது என உட்பிரிவு 19ல் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் குறிப்பிடுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.