டிசம்பர் முதலாம் திகதிக்குள் கொவிட்-19 தடுப்பூசிக்கு பிரித்தானியா ஒப்புதல்?
In இங்கிலாந்து November 23, 2020 8:05 am GMT 0 Comments 2090 by : Anojkiyan

பைசர் இன்க் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிக்கு டிசம்பர் முதலாம் திகதிக்குள் பிரித்தானியா ஒழுங்குமுறை ஒப்புதல் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டாளர்கள், கொவிட்-19 தடுப்பூசியின் முறையான மதிப்பீட்டைத் ஆரம்பிக்கவுள்ளதாக டெலிகிராப் வெளியிட்டு உள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரசாங்க மருத்துவமனைகள் அடுத்த மாத ஆரம்பத்திலேயே தடுப்பூசி செலுத்த தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துவிட்டால் இது சாத்தியமே என கூறப்படுகிறது.
இதன்மூலம் அமெரிக்காவில் தயாராகும் பைசர் மற்றும் பயான்டெக் நிறுவன தடுப்பூசி, அமெரிக்கர்களுக்கு கிடைப்பதற்கு முன்னால், பிரித்தானியர்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.