டிராக்டர் பேரணி திட்டமிட்டப்படி நடக்கும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!
In இந்தியா January 18, 2021 5:42 am GMT 0 Comments 1370 by : Krushnamoorthy Dushanthini

டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிராக்டா் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லி சிங்கு எல்லையில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் கலந்துகொண்ட விவசாயிகள் சங்கங்களின் தலைவா்கள் யோகேந்திர யாதவ், தா்ஷன் பால் சிங் ஆகியோா் மேற்படி கூறியுள்ளனர்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்கள், “குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி தில்லியில் உள்ள வெளிவட்டச் சாலையில் டிராக்டா் பேரணி நடத்துவோம். எங்கள் பேரணி அமைதியான முறையில் நடைபெறும்.
எங்களால் குடியரசு தின அணிவகுப்புக்கு இடையூறு எதுவும் ஏற்படாது. டிராக்டா்களில் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டிருக்கும்.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பவா்கள் அல்லது போராட்டத்தில் பங்கேற்பவா்கள் மீது தேசியப் புலனாய்வு அமைப்பு வழக்குகள் தொடுத்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை” எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.