டி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி

டி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே தாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “டி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே மைத்திரிபால சிறிசேன.
பொது வேட்பாளராக 2014 நவம்பர் மாதம் ராஜபக்ஸ அரசாங்கத்திலிருந்து வௌியேறி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஜனாதிபதித் தேர்தலுக்காக இணையும் போது டி.எஸ். டட்லி ஆகியோரின் ஐக்கிய தேசியக் கட்சியிலேயே இணைகிறேன் என்றே நான் எண்ணியிருந்தேன்.
எனினும், டி.எஸ், டட்லி ஆகியோரின் ஐக்கிய தேசியக் கட்சி அல்லவென்பது எனக்கு பின்னரே புரிந்தது. டி.எஸ் சேனாநாயக்கவிடம் நியாயம், வௌிப்படைத்தன்மை என்பன காணப்பட்டன.
டி.எஸ், F.R சேனாநாயக்க, டட்லி, RD ஆகியோர் அர்ப்பணிப்பு மிக்கவர்கள். ஊழல், மோசடி, திருட்டு ஆகியன அவர்களிடம் ஒருபோதும் காணப்படவில்லை.
அதன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சி பாரிய கட்சியாக கட்டியெழுப்பப்பட்டது. டி.எஸ். சேனாநாயக்கவை நினைவுகூரும் இன்றைய தினத்தில், எதிர்காலத்தில் டி.எஸ், டட்லி ஆகியோரின் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் உருவாக வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.“ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.