டெல்லியில் காற்றின் தரம் கடுமையாக மாசு அடைந்துள்ளது – மத்திய அரசு
In இந்தியா November 6, 2018 2:53 pm GMT 0 Comments 1430 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

டெல்லியில் காற்றின் தரம் கடுமையான அளவுக்கு மோசமடைந்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசு குறித்த தகவல்கள் கவலையளித்து வரும் நிலையில், நேற்று காற்றின் தரம் மிகவும் கடுமையாக மோசமடைந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
வாகனங்கள் வெளியிடும் புகை மற்றும் அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகளை எரிப்பது போன்றவற்றால் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபட்டு வருகிறது.
இதனால் காற்றின் தரத்தை உறுதிசெய்யும் அளவுகோலில், காற்றின் தரக்குறியீடு திங்களன்று நிலவரப்படி 434 என்ற அளவுக்கு பதிவாகியிருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த அளவு காற்றின் தரம் உச்சபட்சமாக மோசமாக உள்ளது. மேலும் காஸியாபாத், நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் காற்று கடுமையான அளவுக்கு மாசுபட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.