டெல்லியில் பதற்றத்தை கட்டுப்படுத்த அமுலுக்கு வந்தது 144 தடை உத்தரவு!
In இந்தியா January 27, 2021 4:51 am GMT 0 Comments 1404 by : Krushnamoorthy Dushanthini

தலைநகர் டெல்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமுலுக்கு வந்துள்ளது.
வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக டெல்லியில் விவசாயிகள் ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்தனர்.இதற்காக குறிப்பிட்ட வழித்தடங்களில் செல்வதற்கு பொலிஸார் நிபந்தனையுடன் அனுமதி அளித்திருந்தனா்.
இந்நிலையில் பேரணிக்கு வந்தவா்கள் அவா்களுக்கு அனுமதி அளித்திருந்த வழித்தடங்களை மீறி செங்கோட்டை, ஐடிஓ, நாங்லோய் உள்ளிட்ட பல இடங்களில் முற்றுகையிட்டதால் பேரணியில் ஈடுபட்டவா்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பின் அது வன்முறையாக மாறியது.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது இல்லத்தில் அவசரக்கூட்டத்தை கூட்டினார். போராட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அமித் ஷா, பதற்றமான பகுதிகளில் அதிகளவில் இராணுவப் படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த அறிவுறுத்தினார்.
குறித்த அறிவுறுத்தலுக்கு அமைய மேற்படி 144 தடை உத்தரவு அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.