டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல்!

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (சனிக்கிழமை) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று மாலை தேர்தல் பிரசாரம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தே போது அங்கிருந்த ஒருவர் அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி மோத்தி நகர் பகுதியில் திறந்த வாகனத்தில் சென்று கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆவேசமாக தகாத வார்த்தைகளால் திட்டியவாறு ஓடிவந்து வாகனத்தின் மீது ஏறிநின்று, கெஜ்ரிவாலின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அரவிந்த் கெஜ்ரிவால் சற்று தடுமாறி நிலைகுலைந்தார்.
அதற்குள் வாகனத்தில் இருந்த ஒருவர் கெஜ்ரிவாலை விலக்கிவிட்டு தாக்குதல் நடத்தியவரை பிடித்தார். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.