டெல்லி அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு!

நடைபெற்றுவரும் 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 34 ஆவது போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.
டெல்லியில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் மும்பை அணி 169 ஓட்டங்களை டெல்லி அணியின் வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.
அவ்வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி நிதானமான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டியது. இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.
அணி சார்பாக குருணல் பாண்டியா ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும், டி ஹொக் 35 ஓட்டங்களையும், கார்த்திக் பாண்டியா 32 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 30 ஓட்டங்களையும் மற்றும் யாதவ் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் டெல்லி அணி சார்பாக, ரபாடா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, அமித் மிஷ்ரா மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் டெல்லி அணி 169 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.