டெல்லி ஐ.ஏ.எஸ் கல்வியகத்தில் பயின்ற தமிழக மாணவி தற்கொலை!

டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ் தேர்வு பயிற்சி கல்லூரியில் பயின்று வந்த தமிழக மாணவியான ஸ்ரீமதி என்பவர் தற்கொலை செய்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள ஆலாம் பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் ஸ்ரீமதி (20) டெல்லியில் கடந்த 6 மாதங்களாக ஐ.ஏ.எஸ் கல்லூரியில் கல்வி கற்று வந்தார்.
இந்தநிலையில் கரோல் பாக் பகுதியில் மாணவியர் தங்கும் விடுதியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்த மாணவியின் பெற்றோர் டெல்லிக்கு சென்றனர்.
தமிழக மாணவி டெல்லியில் கல்லூரியில் பயின்ற போது தற்கொலை செய்துகொண்டமை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து டெல்லி பொலிஸா்ர தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கடுமையான மன உளைச்சல் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மரண விசாரணைகளின் பின்னர் மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு மாணவியின் உடல் தமிழகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.