டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பேரணி
In இந்தியா January 26, 2021 8:18 am GMT 0 Comments 1548 by : Dhackshala

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகத்திலும் பல இடங்களில் விவசாயிகள் டிராக்டர், இரு சக்கர வாகனத்தில் பேரணி நடத்தினர். அத்தோடு, ஒரு சில இடங்களில் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
தஞ்சாவூரில் நடக்கவிருந்த டிராக்டர் பேரணிக்கு பொலிஸார் அனுமதி மறுத்தனர். இதனால், தஞ்சாவூர்- திருச்சி நெடுஞ்சாலையில் 300க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
அதேபோல திருச்சியிலும் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். திருச்சி கொள்ளிடம் பாலம் பகுதியில் இருந்து பேரணியாக சென்று, மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
உழவர் சந்தையிலும் இருசக்கர வாகனத்தில் பேரணி நடந்தது. இதன்போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே சிறு மோதலும் ஏற்பட்டது.
கடலூரிலும் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை, விருதுநகர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்தது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை இரத்து செய்யக்கோரி, தஞ்சையில் விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளிக்காத நிலையில் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கும் சிறு மோதல் ஏற்பட்டது.
விழுப்புரம் ரயில் நிலையம் அருகே, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணி நடத்தினர். திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இரு சக்கர வாகனத்தில் தேசிய கொடி கட்டி பேரணி முன்னெடுக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.