டைபாலாவை வாங்க மென்செஸ்டர் யுனைடெட் அணி பேச்சுவார்த்தை!
In உதைப்பந்தாட்டம் May 8, 2019 7:35 am GMT 0 Comments 2353 by : Anojkiyan

இத்தாலியின் முன்னணி கழக அணியான ஜூவெண்டஸ் கழக அணிக்காக விளையாடிவரும் பவுலோ டைபாலாவை வாங்குவதற்கு இங்கிலாந்தின் முன்னணி கழக அணியான மென்செஸ்டர் யுனைடெட் அணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் தலைசிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் மென்செஸ்டர் யுனைடெட். அணி, இந்த சீசனில் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் தவரிசையில் 6ஆவது இடம்பிடித்து யூரோ சம்பியன்ஸ் லீக் தொடருக்கான வாய்ப்பை இழந்தது.
இதனால் அணியை வலிமைப்படுத்த அந்த அணியின் பயிற்சியாளர் முடிவு செய்துள்ளார். இதனால் இத்தாலியின் தலைசிறந்த கழக அணியான ஜூவெண்டஸ் கழக அணிக்காக விளையாடிவரும் பவுலோ டைபாலாவை 85 மில்லியன் பவுண்ஸ்களுக்கு வாங்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த முன்கள வீரரான டைபாலா, கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து ஜூவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
அவர் இதுவரை 125 போட்டிகளில் விளையாடி 57 கோல் அடித்துள்ளார். அர்ஜென்டினா அணிக்காக 19 போட்டிகளில் களம் இறங்கி ஒரு கோல் அடித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.