News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • புதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது!
  • விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்!
  • பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
  • யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்
  • தேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..!
  1. முகப்பு
  2. அமொிக்கா
  3. ட்ரம்ப் – புட்டின் எதிர்பார்ப்புமிக்க சந்திப்பு இன்று

ட்ரம்ப் – புட்டின் எதிர்பார்ப்புமிக்க சந்திப்பு இன்று

In அமொிக்கா     July 16, 2018 4:18 am GMT     0 Comments     1634     by : Varshini

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருக்கிடையிலான எதிர்பார்ப்புமிக்க சந்திப்பு, பின்லாந்து தலைநகர் Helsinkiஇல் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தின் இறுதிக்கட்டமாக, ட்ரம்ப் இன்று புட்டினை சந்திக்கவுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது இணைய ஊடுருவலை மேற்கொண்டதாக 12 ரஷ்யர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், இன்று நடைபெறும் இச்சந்திப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இக்குற்றச்சாட்டை புட்டின் முழுமையாக நிராகரித்திருந்த நிலையில், இன்றைய சந்திப்பின்போது இவ்விடயம் தொடர்பாக ட்ரம்ப் நேரடியாகவே வினவுவார் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன், ஏ.பி.சி. செய்திச்சேவையிடம் கூறியுள்ளார்.

ட்ரம்ப் – புட்டின் சந்திப்பை முன்னிட்டு, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 2000இற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் பின்லாந்து தலைநகரில் குவிந்துள்ளனர்.

இச்சந்திப்பு தொடர்பில் குறைந்தளவான எதிர்பார்ப்புகளே காணப்படுவதாக குறிப்பிட்டிருந்த ட்ரம்ப், சிறந்த விடயங்களும் இடம்பெற வாய்ப்புள்ளதாக நம்பிக்கை வெளியிட்டிருந்தார். அத்தோடு, உலக நாடுகளில் அணுவாயுத தடை தொடர்பில் புட்டினுடன் முக்கிய உடன்படிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, ரஷ்ய உளவாளி ஒருவருக்கு பிரித்தானியாவில் நஞ்சூட்டப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ரஷ்யாவே செயற்பட்டுள்ளதென பிரித்தானியா குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த மாதமும் இருவர் இந்த நச்சுத்தாக்குதலுக்கு உள்ளாகியதோடு, அதில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், புட்டினுடனான சந்திப்பின்போது இவ்விடயம் தொடர்பாக கேள்வியெழுப்பவுள்ளதாக, பிரதமர் தெரேசா மேயுடன் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின்போது ட்ரம்ப் உறுதியளித்திருந்தார்.

இவற்றுடன் சிரிய விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இச்சந்திப்பின்போது கலந்துரையாட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அமெரிக்க – வடகொரிய தலைவர்கள் சந்திப்பின் பின்னர் இடம்பெறவுள்ள மிகமுக்கிய சந்திப்பாக இச்சந்திப்பு அமையவுள்ளதோடு, உலக நாடுகள் இச்சந்திப்பு தொடர்பாக உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை  

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதற்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அப

  • ட்ரம்புடனான சந்திப்பு – 25 ஆம் திகதி வியட்நாமிற்கு கிம் ஜோங் உன் விஜயம்!  

    வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் எதிர்வரும் 25ஆம் திகதி வியட்நாமில் தரையிறங்குவார் என ரொய்ட்டர் செய்த

  • தேசிய அளவில் அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!  

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தேசிய அளவிலான அவசரகால நிலையை அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும்

  • அரச முடக்கத்தை தவிர்க்கும் புதிய ஒப்பந்தத்தை ஆதரிக்கும் தீர்மானமில்லை: ட்ரம்ப்  

    அரசாங்கத்தின் முடக்கத்தை தவிர்ப்பது தொடர்பான புதிய ஒப்பந்தத்தை ஆதரிப்பது குறித்து இதுவரை தீர்மானமில்

  • ஏவுகணை தயாரிப்புத் திட்டத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது – ஈரான்  

    ஈரானின் ஏவுகணைத் தயாரிப்புத் திட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று அந்நாட்டு ஜனாதிபதி ஹா


#Tags

  • Donald Trump
  • Helsinki
  • Viladimir Putin
  • டொனால்ட் ட்ரம்ப்
  • விளாடிமிர் புட்டின்
    பிந்திய செய்திகள்
  • புதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது!
    புதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது!
  • விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்!
    விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்!
  • பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
    பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
  • யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்
    யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்
  • உலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்
    உலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்
  • தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்
    தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்
  • ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை
    ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்
    நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்
  • வடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி!
    வடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி!
  • இலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்
    இலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.