தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம்: பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு
In இந்தியா October 30, 2018 5:04 am GMT 0 Comments 1422 by : Yuganthini

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பதினொறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்கின் மீதான விசாரணையை ஒத்தி வைக்குமாறு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் போதான மனுக்களின் மீது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை செயலாளர் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க கொறடா சக்கரபாணி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதுதான விசாரணைகள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.