தங்கமங்கை வீராங்கனையின் வரலாறு படமாகிறது

கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் அதிகளவில் திரைப்படமாக்கப்படுகிறது.
அந்தவகையில், எம்.எஸ்.தோனி, மேரிகோம், சச்சின், உட்பட பல விளையாட்டு நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் வெளியாகி பெரும் வெற்றியும் பெற்றுள்ளன.
இந்நிலையில், தற்போது தடகளப் போட்டியில் பல்வேறு சாதனைகள் செய்து தங்கங்களை வென்று குவித்த பி.ரி.உஷாவின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாகவுள்ளது.
பிரபல மலையாள இயக்குநர் ரேவதி வர்மாவின் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் பி.ரி.உஷாவின் பாத்திரத்தில் பிரபல பொலிவூட் நடிகை கத்ரினா கைஃப் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
சமீபத்தில் இயக்குநர் ரேவதி, கத்ரினா கைஃபை சந்தித்து இப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இதில் நடிக்க கத்ரினா கைஃப் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.