தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோஹ்லி தெரிவு: ஸ்மித்- ரஷித் கானுக்கும் விருது!

தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐசிசி) விருதுகள் அறிவிக்கும் நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது.
இதில் கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சோபர்ஸ் விருது டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களை முன்னாள் வீரர்களை கொண்ட குழு, பத்திரிகையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனத்தினர் ஆகியோர் தெரிவு செய்தனர்.
இதில் இவர்களது பங்களிப்பு 90 சதவீதம் இருக்கும். மீதியுள்ள 10 சதவீதம் ரசிகர்களின் பங்களிப்பாக இருக்கும். அவர்கள் சிறந்த வீரரை தனது வாக்களிப்பின் மூலம் முடிவு செய்வார்கள்.
இதன்படி தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக (சோபர்ஸ் விருது) விராட் கோஹ்லி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேலும், தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் வீரராகவும் விராட் கோஹ்லி தெரிவுசெய்யப்பட்டார்.
தசாப்தத்தின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அவுஸ்ரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தும், தசாப்தத்தின் சிறந்த ரி-20 கிரிக்கெட் வீரராக ஆப்கானிஸ்தானின் ரஷித் கானும் தெரிவுசெய்யப்பட்டனர்.
Spirit of cricket விருது இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனிக்கு வழங்கப்பட்டது.
கடந்த 2011ஆம் ஆண்டு நொட்டிங்ஹாம் டெஸ்டின் போது இங்கிலாந்து வீரர் இயன் பெல் விடயததை சிறப்பாக கையாண்டதற்றாக இந்த விருது வழங்கப்பட்டது.
இதேபோல தசாப்தத்தின் பெண்களுக்கான ஒருநாள் மற்றும் ரி-20 வீராங்கனையாக அவுஸ்ரேலியாவின் எலீஸ் பெர்ரி தெரிவுசெய்யப்பட்டார். மேலும், தசப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை (ரேச்சல் ஹேய்ஹோ பிளின்ட்) விருதையும் வென்றார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.