தடுப்பூசிக்குப் பிறகு மக்களுக்கு ஏற்படும் எதிர்வினைகள் குறித்து ஆராய விஷேட குழு!

மக்கள் தற்போது கொவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதால், தடுப்பூசிக்குப் பிறகு மக்களுக்கு ஏற்படும் எதிர்வினைகள் என்ன என்பதை கனடா கண்காணித்து வருகின்றது.
தடுப்பூசிகள் பற்றிய ஒன்லைன் அறிக்கைகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பிற்பகலிலும் எத்தனை பேருக்கு எதிர்வினைகள், அவர்களின் வயது மற்றும் பாலினம், தடுப்பூசி வகை மற்றும் சரியான எதிர்வினைகள் பற்றிய தகவல்களுடன் புதுப்பிக்கப்படும்.
ஜனவரி 1ஆம் திகதி வரை, கனடாவில் 115,072 தடுப்பூசி மருந்து அளவுகள் நிர்வகிக்கப்பட்டுள்ளன.
ஒன்பது பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் நான்கு தீவிரமானவை அல்ல. ஐந்து தீவிரமாக இருந்தன. ஆனால், அது கோவிட்-19 தடுப்பூசியுடன் தொடர்புடையது என்று அர்த்தமல்ல.
இதுவரை ஒன்பது புகார்களில், எட்டு தீவிரமான புகார்களுடன் 65 எதிர்வினைகள் இருந்தன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.