தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து கருத்து – எச்சரிக்கை விடுத்தார் சரத் வீரசேகர!
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து கருத்து வெளியிடுவதன் ஊடாக, பொதுமக்களை தவறான வழிக்கு கொண்டு செல்வதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஜேர்மனிய நாடாளுமன்றத்தில் ஹிட்லர் மற்றும் நாஜி படைகளை புகழ்ந்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு பேசினால், சிறை தண்டனை அனுபவிக்க நேரும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இலங்கையில் அவ்வாறானதொரு நிலைமை இல்லாததன் காரணமாக, இனவாத குழுவினர் அதன் ஊடாக தேவையற்ற நன்மைகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.