தட்டை (எள்ளடை)
November 11, 2018 2:14 am GMT

தேவையான பொருட்கள்
மைதா மாவு – ஒரு கப், அரிசி மாவு – அரை கப், மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி, பெருங்காயத் தூள் – கால் தேக்கரண்டி, சோடா உப்பு – ஒரு சிட்டிகை, எள்ளு – ஒரு தேக்கரண்டி, உப்பு – அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை – ஒரு கொத்து, ஊற வைத்து கடலைப்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
செய்யும்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன், அரிசி மாவு, சோடா உப்பு, பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள், உப்பு, ஊற வைத்த கடலைப்பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிருதுவாகும் வரை பிசையவும். அதில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி மேலும் சிறிது நேரம் பிசையவும்.
பின்னர் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்த்து பிசைந்து விடவும். கடைசியாக எள்ளு மற்றும் எண்ணெய் சேர்த்து பிசையவும். பிசைந்த மாவை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த மாவை சிறு உருண்டைகளாக பிரித்து உருட்டி வைக்கவும். பின்னர் ஒரு உருண்டையை எடுத்து மைதாவில் தோய்த்து எடுத்து சப்பாத்தி கட்டையால் மெல்லியதாக தேய்க்கவும்.
இதே போல் மீதமுள்ள உருண்டைகளையும் மெல்லியதாக தேய்த்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் தட்டையை போட்டு இரண்டு பக்கமும் திருப்பி விட்டு எண்ணெயின் சலசலப்பு அடங்கியதும் எடுக்கவும்.
மொறுமொறுப்பான தட்டை அல்லது எள்ளடை ரெடி.
-
கம்பங்கூழ்
தேவையான பொருட்கள் கம்பு – ஒரு கப் கூழ் கரைக்...
-
நண்டு மசாலா குழம்பு
தேவையான பொருட்கள் நண்டு – 6, தயிர் – ஒ...