தண்டனைகள் குறைப்பு – 450 கைதிகளின் பெயர்ப்பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு
In இலங்கை December 30, 2020 8:24 am GMT 0 Comments 1614 by : Dhackshala
சிறைக்கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை குறைக்கும் திட்டத்தின் கீழ், சுமார் 450 கைதிகளின் தண்டனைகள் குறைக்கப்படவுள்ளன.
இதனையடுத்து, தண்டனைகளை குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட கைதிகளின் பெயர்ப்பட்டியல், ஜனாதிபதியின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதுடன், உடனடியாக கைதிகளுக்கான தண்டனைகள் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படவுள்ளது.
மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு அந்த தண்டனை 20 வருடங்கள் வரை குறைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், கைதிகளுக்கான தண்டனை குறைக்கும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டபோதிலும் 22 வருடங்களுக்கு முன்னர் அது கைவிடப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.