தண்டனையைவிட மன்னிப்பே உகந்தது: இளவரசர் சார்ள்ஸ்
In இங்கிலாந்து April 19, 2019 8:57 am GMT 0 Comments 2427 by : Varshini

கத்தியுடன் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், அவர்களை மன்னிப்பது அதனைவிட சக்திமிக்கதென்றும், அது குற்றவாளிகளை மாற்றவல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் கத்திக்குத்துச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், இளவரசர் சார்ள்ஸ் வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்து கிறிஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை இதன்போது நினைவூட்டிய இளவரசர் சார்ள்ஸ், இருளின் கொடூமான பக்கங்களே அவையென கூறியுள்ளார்.
குற்றவாளிகள் அனைவரும் சட்டத்திற்கு முன்னர் கொண்டுவரப்பட வேண்டும். அதனால் குற்றவாளிகள் மாறுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. ஆனால் மன்னிக்கும்போது, அது அவர்களை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மாற்றத்திற்கு வழியேற்படும் என இளவரசர் சார்ள்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் மாத்திரம் பிரித்தானியாவில் 39,818 கத்திக்குத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.